• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil >  Mella Mella Ennai Kollathey

 Mella Mella Ennai Kollathey ( மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே! )

Author: ராஜேஷ்குமார்

Tamil

20 ( 25% off)
15

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

சாஸ்திரிகள் ஜாதகத்தையும், பஞ்சாங்கத்தையும் பிரித்து வைத்துக் கொண்டு சில நிமிடங்கள் வரை அதில் தீவிரமாய் இருந்தார். பின் ஜெகதாம்பாளிடம் நிமிர்ந்தார்.“உங்க பொண்ணு எப்போ கல்யாணம் பண்ணிகிட்டா?”“போன வாரம் ஞாயிற்றுக்கிழமை.”“கல்யாணம் இந்து முறைப்படி நடந்ததா… இல்லை கிறிஸ்துவ முறைப்படி நடந்ததா...?”“கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் நடந்தது.”சாஸ்திரிகள் சில விநாடி யோசனையாய் இருந்துவிட்டு ஜெகதாம்பாளை ஏறிட்டார். “நான் ஒரு கேள்வி கேட்ட நீங்க தப்பா நினைக்கக்கூடாது...?”“இல்ல… கேளுங்க…”“உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்டது உண்மைதானா...?”“ஏன் சாஸ்திரிகளே… இப்படி கேட்கறீங்க...? கல்யாணம் பண்ணிகிட்டது உண்மைதான்… மேரேஜ் வீடியோ கேசட் கூட அனுப்பியிருந்தாளே...?”சாஸ்திரிகள் மறுபடியும் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தார்.“உங்க பொண்ணோட ஜாதகம் நல்லாயிருந்தாலும் கோச்சாரம் சரியில்லை. இப்போ இருக்கிற கிரகங்களின் நிலவரப்படி கல்யாணம் நடக்கிறது அவ்வளவு சரியில்லை…”“என் பொண்ணு சிமிக்கு கல்யாணம் நடந்து இருக்கக்கூடாதுன்னு சொன்னீங்க… ஆனா நடந்துடுச்சு… அதனால என்ன கெடுதல் வரும்...?”“கணவன் மனைவி சந்தோஷமா இருக்கமாட்டாங்க… ரெண்டு பேர்க்கும் நடுவில் கோபதாபங்கள் அதிகமாகி விவாகரத்து வரைக்கும் போகலாம்.”“இதுக்கு பரிகாரம் இல்லை...?”“இல்லை…”“கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு எம் பொண்ணோட கல்யாணத்தை நடத்தப் போறேன். அந்த கல்யாணத்தை நீங்கதான் நடத்தித்தரணும்.”“நானா...?”“ஏதாவது காரணத்தைக் காட்டி வரமுடியாதுன்னு சொல்லிடாதீங்க. பெருமாளுக்கு அனுதினமும் பூஜை பண்ற நீங்க எம் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும்போது பக்கத்தில் இருந்தாலே எல்லா தோஷமும் நிவர்த்தி ஆயிடும்…”சாஸ்திரிகள் சிரித்தார். “என் பேர்ல உங்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்தா கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு வர்றேன்…”மனைவி பார்வதி பக்கத்தில் வந்து நின்றாள். மெல்ல முனகினாள். “ஆச்சர்யமாயிருக்கே...?”சாஸ்திரிகள் நிமிர்ந்தார்.“என்ன ஆச்சர்யம்...?”“நீங்க யார் வீட்டு கல்யாணத்துக்கும் போகமாட்டேளே? அந்த ‘அம்மா வீட்டுக் கல்யாணத்துக்கு மட்டும் எப்படி ஒத்துகிட்டேன்...?”சாஸ்திரிகள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்க - பார்வதி லேசான கோபத்துடன் கேட்டாள்.“இப்படி சிரிச்சா அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?”“நான் கல்யாணத்துக்குப் போகப் போறதில்லைன்னு அர்த்தம்.”“வர்றேன்னு சொல்லியிருக்கேளே?”“நான் சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். கல்யாணம் நடந்தால் தானே நான் கல்யாணத்துக்குப் போக முடியும்.”“நீங்க என்ன சொல்றேள்… கல்யாணம் நடக்காதா?”“நடக்காது.”“அதான் வெளிநாட்ல சர்ச்சுல கல்யாணம் நடந்தாச்சே...? சர்ச்சுல கிறிஸ்துவ முறைப்படி கல்யாணம் நடந்தாலும் அது கல்யாணம்தானே...?’“அதுவும் கல்யாணம்தான் ஒத்துக்கிறேன். ஆனா ஹிந்து முறைப்படி தன் பொண்ணுக்கும் அதே மாப்பிள்ளைக்கும் அடுத்த வாரம் இங்கே நடத்தவிருக்கிற கல்யாணம் நடக்காது.”“நடக்காதுன்னு எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?”“நான் சொல்லலை பார்வதி… அந்தப் பொண்ணோட, ஜாதகம் சொல்லுது…”“என்ன சொல்லுது...?”“அந்தப் பொண்ணு சிமி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும்போது தனியாத்தான் வருவா…”“ஏன்…?”“அவளோட கணவன் மேத்யூ செத்துப் போயிருப்பான்.!!!!!!!!!!!!”

  • Release Date:
  • Book Size: 424 KB
  • Language: Tamil
  • Category: Marmam & Thigil

  • 2017-12-30 21:12:24.0

    Mohan Sivaram Ramasamy


  • 2017-12-20 16:30:39.0

    prabhu pandi


  • 2017-12-16 19:51:41.0

    siva






Top

If you want to read ebooks please download our app in your favorite mobile