• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Naam Therindhu Kollavendiya Sila Seithigal

Naam Therindhu Kollavendiya Sila Seithigal ( நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் )

Author: எம்.சி. சிவசுப்பிரமணியன்

Tamil

230

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் விவசாயம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.மக்கள் தொகையில் 50ரூ சதவீதம் பேர் ஈடுபட்டு அதை நம்பி வாழும் விவசாயப் பெருங்குடி மக்கள் சார்பிலும் பொதுவாக ஏழை மக்கள் சார்பிலும் ஆசிரியர் பல கருத்துக் களை தீர்க்கமாக எடுத்துரைத்துள்ளார்.அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே அரை மனத்தோடு செய்யப்படுகின்றன என்றும் அதனால் விவசாய மக்கள் எந்த பலனையும் பெறவில்லை. பெரிய விவசாயிகள் மட்டுமே ஆதாயம் அடைகிறார்கள் என்றும் ஆசிரியர் விளக்கி இருக்கிறார். மற்றும் இத்தகைய பிரச்சினையை தீர்க்கும் முகமாக டாக்டர் சுவாமிநாதன் கமிஷன் சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. ஆனால் அரசு அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அது தூசு அடைந்து கொண்டிருக்கிறது.மேற்கண்ட நிலைதான் தொழில் துறைக்கும். புது தொழில்கள் ஆரம்பிக்க போடப்பட்ட விண்ணப்பங்களால் பல லட்சம் கோடி பணம் முடங்கிக் கிடக்கின்றன. ஆக வளர்ச்சி என்பது மிகவும் குறைந்து 4. 5ரூ என்ற நிலையில் உள்ளது. நன்றாக அது வளர்ச்சி அடைந்த காலத்தில் கூட அது ஏழை மக்களை சென்று அடையவில்லை. மேல்மட்ட மக்களுக்கே பலன்கள் கிடைக்கப் பெற்றன. விளைவு ஏழை பணக்காரன் இடைவெளி மேலும் மேலும் கூடியுள்ளது.உணவு தானிய பொது வினியோகம் போன்ற பலன்கள் லஞ்ச ஊழலில் சிக்கி திணறுகிறது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவற்றுக்கெல்லாம் தீர்வாக மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருந்து அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தட்டிக் கேட்க வேண்டும் என்று மக்களை ஆசிரியர் கேட்கிறார்.

  • Release Date:
  • Book Size: 1 MB
  • Language: Tamil
  • Category: Varalaru & Arasiyal

  • 2017-01-31 10:05:35.0

    raji arjunan


    as your rate

    8





Top

If you want to read ebooks please download our app in your favorite mobile